ஃபேஸ்புக் லைவ்-ல் ஒருவர் விபரீத முடிவு : திருப்பூரை அதிர வைத்த துயரம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூரில் ஃபேஸ்புக் நேரலை வீடியோவை ஒளிபரப்பி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (37). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி (34). இவர்களுக்கு நவநீத் (13) என்ற மகன் உள்ளார். வீட்டின் பொருளாதாரம் காரணமாக சுகாசினி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பள்ளிகள் திறக்கப்படாததால் மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டுள்ளார்.

image


Advertisement

இந்நிலையில் இன்று மதியம் தனது தந்தைக்கு போன் செய்த ராம்குமார், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது மகனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படியும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன்பிறகு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்த ராம்குமார், துணி ஒன்றை எடுத்து தனது கழுத்தில் சுற்றிக்கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த காட்சிகள் அனைத்தும் ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பாகின. இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சுகாசினி நேரில் சென்று பார்த்த போது ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராம்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

image


Advertisement

அதில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், ‘மானம் கெட்ட உலகம். இதில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. இந்த உயிர் தலைமுடிக்கு (திருத்தப்பட்ட வார்த்தை) சமம். யாரும் கவலைப் பட வேண்டாம்’ என எழுதியுள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்ளும்போது, மது போதையில் இருந்தது தெரியவந்ததுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வல்ல. எனவே தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ளவும்..

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

வேடந்தாங்கல் சரணாலயத்தை மேம்படுத்தவே பரப்பளவு குறைப்பு : தமிழக அரசு

loading...

Advertisement

Advertisement

Advertisement