Advertisement

’சயின்டிஸ்ட் ஆக நினைத்தேன்’ வேலை கிடைக்காமல் பழம் விற்கும் பிஎச்டி பட்டதாரிப் பெண்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் பர்தேசிப்புரா நகரில் பேக்கரி தெருவில் வசிக்கும் ரெய்சா அன்சாரியின் கனவு அறிவியல் விஞ்ஞானியாவது. ஆனால் எதார்த்தமோ பழங்கள் விற்பதாக உள்ளது. எங்குமே வேலை கிடைக்காமல், கனவை தூக்கி பரணில் வைத்துவிட்டு பழங்கள் விற்கத் தொடங்கிவிட்டார்.   


Advertisement

ரெய்சா படித்திருப்பது மெட்டீரியல் சயின்ஸ் பாடப்பிரிவில் பிஎச்டி. தள்ளுவண்டியில் பழங்கள் விற்கும் அவர், தங்களை அலைக்கழிக்கும் நகராட்சி அதிகாரிகளை வசைபாடுகிறார். அவருடைய உடன்பிறப்புகளும்கூட நன்றாக படித்துவிட்டு பழங்கள்தான் விற்கிறார்கள்.  

image


Advertisement

“நான் பிஎச்டி படித்திருக்கிறேன். சயின்டிஸ்ட்டாக விரும்பினேன். எங்குமே வேலை கிடைக்கவில்லை. நான் பழங்கள் விற்பது நகராட்சி அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை. என்னை மாட்டைப்போல அங்கும் இங்குமாக அலையவிடுகிறார்கள். எனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு எங்கள் மதமும் ஒரு தடையாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இந்தியன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறோம். இன்றும் நான் வேலை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்கிறார்.

ரெய்சாவின் தாய் ஆயிஷா அன்சாரி படிக்கவில்லை. அவருக்கு நான்கு குழந்தைகள். அதில் மூன்று பெண்கள். இந்த படிக்காத தாய் வறுமையிலும்கூட நான்கு பேரையும் உயர்கல்வி வரை படிக்கவைத்துள்ளார். ஆனால் ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்பதுதான் பரிதாபம்.

loading...
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement