தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயக்குநர் வெற்றிமாறனின் திரையுலக ஆடுகளம், தனுஷ் நடித்த பொல்லாதவனில் தொடங்கியது. அடுத்து இருவரும் ஆடுகளத்தில் சேர்ந்தார்கள். அந்தப் படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. வடசென்னை, அசுரன் என தொடரும் வெற்றிப்படங்களில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்தார்.


Advertisement

மீண்டும் அவர்கள் வடசென்னை 2 படத்தில் இணையப்போவதாக கோடம்பாக்த்தில் பேச்சு தொடங்கியுள்ளது.  எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகப்போகும் அந்தப் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். அதற்கான பேச்சுவார்த்தைகள் சில வாரங்களாக தொடர்வதாகச் சொல்லப்படுகிறது.

image


Advertisement

இதனிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் போஸ்டர் அவரது பிறந்தநாளன்று வெளியானது. ஏற்கெனவே சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்குவதாகவும் அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் தனுஷ் பக்கம் வந்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement