Advertisement

“கொரோனாவால் மொத்த தொழிலும் ஒன்னுமில்லாம போயிருச்சு” வேதனையில் சாக்பீஸ் தொழிலாளிகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாக்பீஸ் விற்பனை சரிவு புலம்பும் தொழிலாளி


Advertisement

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பல கட்டுப்பாடுகளால் பெரிய தொழில் முதல் சிறுகுறு தொழில்கள் என அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பலர் வேலையை இழந்து வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி கல்லூரிகளை மட்டுமே நம்பி தொழில் செய்யும் பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் குடிசை தொழிலாக சாக்பீஸ் தயாரிக்கும் அசோக் இடம் பேசினோம்.

image


Advertisement

image 1
நான் இந்த தொழிலுக்கு வந்ததில் இருந்து இப்படியொரு மந்தமான காலத்தை பார்த்ததே இல்லை. தொழிலே படுத்துருச்சு வருமானமே இல்ல. ஸ்கூல் திறந்திருந்தால் இப்பெல்லாம் கைநிறைய காசு இருக்கும். பள்ளி கல்லூரிகள் திறக்காததால் வியாபாரமே இல்ல. ஏற்கெனவே பள்ளிகளில ஸ்மார் கிளாஸ் அது இதுன்னு ஆரம்புச்சு சாக்பீஸ் வியாபாரமே குறைந்துவிட்டது. இந்த சமயத்துல கொரோனா நோயால் மொத்த தொழிலும் ஒன்னுமில்லாம போயிருச்சு.

மே மாசத்துல இருந்து நவம்பர் மாசம் வரையிலும் வியாபாரம் அருமையாக இருக்கும். நல்ல வருமானமும் வரும். அந்த காலத்துல குடும்பத்துக்கு தேவையானவைகளை வாங்குவோம். இப்ப சுத்தமா வருமானம் இல்ல. ஸ்கூல இப்ப திறப்பாங்க அப்ப திறப்பாங்கன்னு சொல்றாங்க ஆனா எப்ப திறப்பாங்கன்னு தெரியல. அதுவரையிலும் எப்படி பொழப்பை ஓட்டுறதுன்னு தெரியல.

image


Advertisement

image 2
கொரோனாவுக்கு பயந்துகிட்டு சும்மாவே வீட்டுல ஒக்கார முடியுமா. வெயில் அடிக்கிற காலத்துலதான் சாக்பீஸ் தயாரிக்க முடியும் அதனால ஏழுவகையான கலர்ல தொடர்ந்து சாக்பீஸ் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்னைக்கா இருந்தாலும் ஸ்கூல திறந்துதானே ஆகணும் அப்ப இதையெல்லாம் வித்துருவோம் என்றார் அசோக் நம்பிக்கையுடன்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement