சிலருக்கு எப்போதாவது விக்கல் வரும். சிலருக்கு அடிக்கடி விக்கல் வரும். சிலருக்கு விக்கல் வந்தால் நீண்ட நேரத்திற்கு நிற்காது. விக்கல் வருவதற்கான காரணம் என்ன என்பது பலருக்கும் தெரியாது. சில எளிய வழிகள் எந்தவித பாதிப்புமில்லாமல் விக்கலை நிறுத்த உதவும்.
சாதாரணமாக விக்கல் வந்தால் யாரோ நம்மை நினைத்துக் கொள்கிறார்கள் என சொல்வார்கள். சிலர் உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தான் விக்கல் வருகிறது என சொல்வார்கள். ஆனால் உண்மையில் உதரவிதானத் தசை (Diaphragm muscle) திடீரென சுருங்குவதால், ஒருவித தசைபிடிப்பு ஏற்படுகிறது. இதனால் குரல் நாண்கள் மூடி, விட்டுவிட்டு ஒருவித ஒலியை உண்டாக்குகிறது. இதுதான் விக்கல்.
விக்கல் எதனால் வருகிறது?
வேகமாக சாப்பிடுதல்
அளவுக்கதிகமாக சாப்பிடுதல்
நரம்புகளை எரிச்சலூட்டும், உதரவிதானத்தைக் கட்டுப்படுத்தும் நோய்கள்
அடைப்பு
ப்ரெய்ன் ட்யூமர்
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுதல்.. போன்ற காரணங்கள்தான் பெரும்பாலும் விக்கலை வரவைக்கும்.
விக்கலிலிருந்து விடுபட சில எளிய வழிகள்
தண்ணீர் மட்டும் குடித்தால் போதும் விக்கல் நின்றுவிடும் என்று சொல்லிக்கொடுத்தவர்கள் அதை எப்படிக் குடித்தால் உடனே நிற்கும் என சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டனர். தொடர்ந்து பத்து முறை மடமடவென குடிக்கவேண்டும். அப்படி வேகமாக குடிப்பதால் விக்கல் நிற்கும்.
தொடர் விக்கல் வரும் நேரத்தில் ஸ்ட்ராவால் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு காதுகளையும் அடைத்துக்கொண்டு காதுகளுக்கு பின்புறம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனால் சீக்கிரத்தில் விக்கல் நிற்கும்.
நாக்கை நன்றாக வெளியே நீட்டுங்கள். அப்படியே சில நொடிகள் வைக்கவேண்டும். பாடகர்கள்கூட இந்த எளிய பயிற்சியை குரல்வளத்தை மேம்படுத்த செய்வார்கள். இதனால் மூச்சுவிடுதல் எளிதாகும்.
விக்கல் வரும்போது இரண்டு காதுகளையும் விரலை வைத்து குறைந்தது 30 நொடிகள் அடைத்து வைக்கவும். அடைத்துக்கொண்டிருக்கும்போதே காதுகளுக்கு பின்புறம் இருக்கும் மென்மையான காது எலும்புகளை மெதுவாக அழுத்தவும். இது வேகஸ் நரம்புகளுக்கு கட்டளை கொடுத்து ரிலாக்ஸ் ஆக்கும். இதனால் விக்கல் நின்றுவிடும்.
விக்கலை நிறுத்த மற்றொரு சிறந்த முறை சிறிது எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை வாயில் வைத்து நன்றாக உறிஞ்சி சாப்பிட வேண்டும். இப்படி செய்வதால் குறைந்தது 98 சதவீதம் பேருக்கு விக்கல் நின்றுவிடும்.
பெரும்பாலும் எல்லாராலும் சொல்லப்படுகிற டிப்ஸ் இது. ஒரு ஸ்பூன் சர்க்கரையை அப்படியே விழுங்குவதன்மூலம் விக்கல் நின்றுவிடும். ஆனால் இது உணவுக்குழாயில் சற்று எரிச்சலை ஏற்படுத்தும்.
ஒரு ஸ்பூன் பீனட் பட்டரை வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்குவதன் மூலம் விக்கல் அப்படியே நிற்கும்.
தேன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் அருமருந்து என்பது நாம் நன்கு அறிந்ததே. தேனை சிறிது சுடுதண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி நாக்கின் அடியில் சிறிது நேரம் வைத்து விழுங்க விக்கல் நிற்கும்.
திடீரென ஷாக் கொடுத்தால் சிலருக்கு விக்கல் நின்றுவிடும்.
நன்றாக அமர்ந்துகொண்டு முழங்காலை மடக்கி மார்புவரை கொண்டு சென்று கட்டிப்பிடித்து அப்படியே 2 நிமிடம் இருக்கவேண்டும். முழங்கால் மார்புப் பகுதியில் அழுத்தம் கொடுக்கும். இதனால் விக்கல் நிற்கும்.
ஒரு காகிதப் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக அதற்குள் சுவாசிக்கவும். இது ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரித்து, சுவாசக்குழாயில் அதிக ஆக்ஸிஜன் தேவைப்படும் படி செய்யும். இதனால் விக்கல் நின்றுவிடும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனாலும் விக்கல் உடலில் பல்வேறு காரணங்களால் ஏற்படுவதால் இதுதான் தீர்வு என யாராலும் கணிக்க முடிவதில்லை.
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி