போதையில் மகளை கத்தியால் தாக்கிய தந்தை... மரணத்தில் முடிந்த தகராறு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 1 மணிக்கு தனது வீட்டில் இருந்த கீபோர்டை வாசிக்கத் தொடங்கினார். அப்போது பக்கத்து அறையிலிருந்து வெளிவந்த மகள் தான் படித்துக்கொண்டிருப்பதாகவும், சத்தமாக கீபோர்டு வாசிப்பது தனக்கு தொந்தரவாக இருப்பதாகவும் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் அவர் தந்தையோ வாசிப்பதை நிறுத்த மறுத்துவிட்டார். சத்தத்தையும் குறைக்கவில்லை. இப்படி சத்தம் வந்தால் அக்கம்பக்கத்தில் குடியிருப்பவர்கள் போலீஸிடம் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என கூறியுள்ளார்.


Advertisement

image

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து மகளைத் தாக்கியுள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தோள்ப்பட்டை, முதுகு மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தனது தந்தையை பிடித்து தள்ளிவிட்டு உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். கீழே விழுந்தபோது கையிலிருந்த கத்தி அந்த நபரின் மார்பில் குத்தியுள்ளது. ஆனால் அதை கவனிக்காமல் மீண்டும் கீபோர்டை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.


Advertisement

அதிகாலை 3 மணியளவில் அந்த சிறுமியின் சகோதரர் கதவைத் தட்டியுள்ளார். அவர் கழிவறைக்கு செல்ல வெளியே வந்ததாகவும், அப்போது அவர் தந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டதாகவும் கூறியுள்ளார்.

image

இதனால் பயந்துபோன சிறுமி, காவலாளிகளை கூப்பிட்டு இருக்கிறாள். அவர்கள் அருகில் இருந்த MICO போலீசாரை அழைத்துள்ளனர். போலீஸார் அங்கு வருவதற்குள் அவர் இறந்துவிட்டதாகவும் விசாரித்த காவல் அதிகாரி கூறியுள்ளார்.


Advertisement

அந்த நபர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும், அவர் 2015 வரை சீனியர் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்ததாகவும், 2012இல் அவர் மனைவி இறப்புக்குப் பிறகு, போதைக்கு அடிமை ஆகிவிட்டதாகவும் அவருடைய அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement