7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை, நாமக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

 

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் ...

மேலும், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு லட்சத்தீவு கேரளா கர்நாடகா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement