தேனி அரசு மருத்துவமனையில் தீ விபத்து - கொரோனா நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி அரசு மருத்துவ மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த கொரோனா நோயாளிகள் உடனே வெளியேற்றப்பட்டனர்.


Advertisement

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மருத்துவமனையில் தூய்மை பணி பொருட்கள் மற்றும் ரசாயனப் பொருட்கள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகின.

image


Advertisement

கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிக்கும் பகுதிக்கு கீழே இந்த தீ விபத்து ஏற்பட்டதால், கருகிய ரசாயணப் பொருட்களின் புகையானது தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் இருந்தப் பகுதிக்குச் சென்றது. இதனால் அங்கிருந்தவர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளானார்கள். உடனே அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். பிற நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறினர்.

image

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் மூச்சு திணறல் ஏற்பட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement