[X] Close

இன்று முதல் மழை குறையும் - வானிலை ஆய்வு மையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை முதல் மிக கனமழை பெய்த நிலையில் இன்று முதல் மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியாவின் டெல்லி, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட்,பஞ்சாப்,ஹரியானா, சண்டிகர், உத்திரபிரதேசம்,அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

image


Advertisement

இந்நிலையில், இன்று முதல் மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

தமிழகம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement