டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி விட்டோமா? எப்படி தெரிந்துகொள்வது?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஊரடங்கு நேரத்தில் நமது ஸ்மார்ட்ஃபோன் முதலான டிஜிட்டல் சாதனங்களை மிக அதிகமான நேரம் பயன்படுத்துவதாய் ஆய்வுகள் சொல்கின்றன. உண்மையில் நாம் இதற்கு அடிக்ட் ஆகி விட்டோமா? அடிக்ட் ஆவது என்றால் என்ன? என்பது குறித்து விவரிக்கிறார் மனநல மருத்துவரான சிவபாலன்.


Advertisement

image“எல்லோரையும் போல நானும் இந்த டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துகிறேன். ஆம். கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துகிறேன். கார் ஓட்டும் போது சிக்னலில் நிற்கும் அந்த சில கணம் கூட செல்போனை எடுத்து அதன் திரையை பார்த்துகொள்கிறேன், அந்த சில நிமிடங்களில் கூட வாட்சப்பையோ அல்லது ஃபேஸ்புக் திறந்து பார்த்துக்கொள்கிறேன், எந்த வித காரணமும் இல்லாமல் கூட எனது செல்போனை நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்துக்கொள்கிறேன். நான் எந்த வேலை செய்யும் போது கூட எனது செல்போனின் மீது ஏதோ ஒரு கவனம் எனக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. நான் எனது செல்போனிற்கு அடிமையாகிவிட்டேனா?”

இது நம் எல்லோருக்கும் தோன்றும் கேள்வி தான்.


Advertisement

போதை மற்றும் அடிமைநிலையை பொறுத்த வரையில் அதற்கு ஒரு முக்கியமான பண்பு இருக்கிறது. மது அருந்தும் எல்லோரும் அந்த மதுவிற்கு அடிமையாகிவிட்டனர் என சொல்ல முடியாது. ஒரு இன்பத்திற்காக அல்லது தற்காலிகமாக ஏற்படும் ஒரு நல்லுணர்வுக்காக எப்போதாவது ஒரு போதை பொருளை உபயோகிப்பது அத்தனை ஆபத்தானது அல்ல.

ஆனால் மனதின் வெறுமைக்காக, ஒரு மோசமான மனநிலையில் இருந்து வெளியேறுவதற்காக, அல்லது தீவிரமான மனசோர்வில் இருந்து விடுபடுவதற்காக ஒரு போதை பொருளை உபயோகப்படுத்துவது ஆபத்தானது. அது நம்மை அடிமைநிலை நோக்கி அழைத்து சென்றுவிடும்.

imageஒரு செயலை நான் செய்யும்போது, அது எனக்கு நன்றாக இருக்கிறது அது என்னை எந்த வகையிலும் பாதிப்பதில்லை என்ற வரையில் அது ஒரு ஆபத்தற்ற செயலாக கொள்ளப்படும்.


Advertisement

ஆனால் ஒரு செயல் என்னை கட்டுப்படுத்துகிறது; அந்த செயலை திரும்ப திரும்ப செய்வதற்கு நான் தூண்டப்படுகிறேன்; அப்படி செய்யவில்லையென்றால் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை, மனதில் ஏதோ ஒரு வெறுமையை உணர்கிறேன்; நான் அன்றாடம் செய்யும் செயல்களை செய்வதற்கே திரும்ப திரும்ப செய்யும் அந்த செயல் தேவைப்படுகிறது; அந்த செயலை செய்யவில்லையென்றால் என்னால் வேறு எந்த செயலையுமே செய்ய முடியவில்லை; எனது வாழ்க்கையின் அத்தியாவசியமான அத்தனையும் இதனால் பாதிக்கப்படுகிறது; என்னை சுற்றியுள்ள மனிதர்கள் மீது என்னால் ஒரு பிணைப்பை ஏற்படுத்த முடியவில்லை; அந்த செயலை தவிர வேறு எதுவும் என்னை சந்தோசப்படுத்தவதில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'' என்கிறார் அவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement