அனுமதிக்க மறுத்த மருத்துவனைகள் - அலைக்கழிப்பால் பரிதாபமாக உயிரிழந்த மருத்துவர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெங்களூருவில் அரசு மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இடம் கிடைக்காமல் அலைகழிக்கப்பட்டு மூன்று தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதால் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.


Advertisement

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலிருந்து 50 கி.மீ தூரத்தில் இருக்கும் ராமநகரா மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் மஞ்சுநாத். இவர் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மருத்துவராக பணியாற்றி வந்தார். பணியில் இருந்தபோதே அவர் உடல்நலக் குறைவாக இருந்துள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

உடனே அவரை பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர் அவர் குடும்பத்தினர்.


Advertisement

image

அங்கு கொரோனா பரிசோதனை முடிவைக் காணவேண்டும் என அவர் குடும்பத்தினர் கேட்டிருக்கின்றனர். ஆனால் அங்கு முடியாத நிலையில் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கும் சிகிச்சை அளிக்கமுடியாத நிலையில் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இறுதியாக பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறுதியில் இறந்தார்.

அவரது குடும்பத்தில் நிறைய பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு மீண்டு வந்துள்ளனர். கொரோனா முடிவுகளை வெளியிட மருத்துவமனைகள் தாமதப்படுத்துவதால் சிகிச்சை அளிக்கமுடியாமல் இதுபோன்ற இறப்புகள் நடப்பதாக மருத்துவமனைகள் கூறுகின்றன.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement