Advertisement

கொரோனாவால் பறிபோன வேலை: ‘கோவிட் 19’ என்ற பெயரிலேயே கடை தொடங்கிய இளைஞர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவிட் 19 என்ற பெயரில் கடை தொடங்கிய இளைஞர்கள்


Advertisement

கொரோனாவால் வேலைவாய்ப்பு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்த புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கோவிட்-19 என்ற பெயரில் ஆண்களுக்கான ரெடிமேட் கடை தொடங்கியுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரங்கு உத்தரவை பிறப்பித்து 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழி;வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்,


Advertisement

image

image 1
இந்த ஊரடங்கு உத்தரவால் வேலைவாய்ப்பை இழந்த புதுக்கோட்டையை சேர்ந்த ராசித் மற்றும் முகமது அஸ்லாம்கானும் இணைந்து கோவிட் -19 என்ற பெயரில் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடையகத்தை தொடங்கியுள்ளனர். கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் கோவிட்-19 என்ற பெயரில் புதிய துணிக்கடை ஆரம்பித்து மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர்.

image


Advertisement

image 2
நம்மிடம் பேசிய கடை உரிமையாளர் ராசித் கூறுகையில் நாங்கள் எதனால் வேலைவாய்ப்பை இழந்தோமோ அதைவைத்தே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி முன்னுக்கு வரவேண்டும் என்ற காரணத்தினால்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாங்கள் அதன்பெயரிலேயே ஆண்கள் ரெடிமேட் கடையை திறந்துள்ளோம். கடை ஆரம்பிக்க முடிவுசெய்த போது கையில் பணம்இல்லை அதனால் மனைவியுன் நகையை அடகுவைத்து இந்த கடையை தொடங்கியுள்ளோம். மக்களின் ஆதரவோடு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related Tags : கோவிட் 19 covid 19
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement