சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 50 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆண்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 50 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தங்கராஜ். எலெக்ட்ரீசியனான இவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே வசிக்கும் 9 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

image


Advertisement

image
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு, தங்கராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து தங்கராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர

loading...

Advertisement

Advertisement

Advertisement