பேருந்தை நிறுத்தி பார்வையற்றவருக்கு உதவிய பெண் - வீட்டை பரிசாக அளித்த முதலாளி..!

Reward-for-the-kindness-

சில வாரங்களுக்கு முன்பு பார்வையற்ற ஒருவரை பேருந்தை நிறுத்தி ஒரு பெண் ஏற்றிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. அவருடைய மனிதநேயத்தைப் பாராட்டி பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர். அந்த வீடியோ 1.9மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது.


Advertisement

அந்த பெண்ணின் பெயர் சுப்ரியா எனவும், அவர் கேரளாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள், வாடகை வீடு. இவர் அங்குள்ள பிரபல தனியார் நகைக்கடையில் வேலைசெய்து வருகிறார் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

image
அவர் நகைக்கடையின் சீருடை அணிந்திருந்தார். சோஷியல் மீடியாக்களில் வைரலான அந்த வீடியோவை பார்த்த நகைக்கடையின் உரிமையாளர்  அவரை நேரில் அழைத்து வாழ்த்தியதோடு, வீடு ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.


Advertisement

மத்திய சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர் அமர் பிரசாத் ரெட்டியின் ஊடக ஆலோசகரின் ட்வீட் மூலம் அந்த நகைக்கடை உரிமையாளர் இதைத் தெரிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார். எந்தவித எதிர்பார்ப்புமின்றி செய்யப்படும் செயல்களுக்கு நிச்சயம் வேறு வழியில் பலன் வந்துசேரும் என நெட்டிசன்கள் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement