Advertisement

பெங்களூருவில் தபால்காரருக்கு கொரோனா: சோதனைக்கு தயாராகும் சக ஊழியர்கள்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

பெங்களூரு நகரத்தில் உள்ள  மத்திய அஞ்சல் நிலையத்தில் பணியாற்றும் தபால்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள விநியோகப் பிரிவு செவ்வாய் முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.

நகரின் பெரிய அஞ்சல் நிலையமாக பரபரப்பாக இயங்கும் அங்கு 5 ஆயிரம் ஸ்பீடு போஸ்ட் கடிதங்கள், 3 ஆயிரம் பதிவுத் தபால்கள் மற்றும் 550 பார்சல்கள் தினமும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக மேலும் நகரில் உள்ள நான்கு துணை அஞ்சலகங்களும் மூடப்பட்டுள்ளன.


Advertisement

image

“தலைமை அஞ்சலக தபால்காரர் ஒருவருக்கு திங்களன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனால் விநியோகப் பிரிவை மூடியுள்ளோம். அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று பெங்களூரு வட்டார அஞ்சல்துறை அதிகாரி  எஸ். ராஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement