இதை நம்பித்தான் ஆகவேண்டும்.... நான்கு வயது சிறுவனின் கவிதைப் புத்தகம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன், ஒரு கவிதைப் புத்தகம் எழுதி, அதை ஒரு பதிப்பாளருடன் பதிப்பிக்க ஒப்பந்தம் செய்துள்ளான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். இதுபற்றி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Advertisement

அந்தச் சிறுவனின் பெயர் நாதீம் ஷம்மா சோர்ஜன். கம்மிங் ஹோம், லவ், பட்டீஸ் என்ற தலைப்புகளில் நிறைய கவிதைகள் எழுதியுள்ளான். ஜான் கீட்ஸ், தன் கவிதைகளை வெளியிட்டபோது வயது 21. மேரி ஸெல்லி வெளியிட்டபோது வயது 18. இந்த மாபெரும் கவிஞர்கள் இளம் வயதில் சாதித்த மண்ணில் இருந்து நான்கே வயதான கவிஞன் நாதீமூம் வந்திருக்கிறான். 

image


Advertisement

இந்த கவிதைச் சிறுவனைக் கண்டுபிடித்தவர் இந்த ஆண்டு ஆர்வெல் பரிசு பற்ற கவிஞரும் ஆசிரியருமான கேட் கிளாஞ்சி. அவர்தான் சிறுவன் நாதீமின் தாய் யாஸ்மின் ஷம்மாவைச் சந்தித்தார்.  யுனிவர்சிட்டி ஆர் ரீடிங்  கல்வி நிலையத்தில் பணியாற்றும் அவர், அகதிகளுக்கு கவிதை எழுதுவதற்கான பயிற்சியும் அளித்துவருகிறார். இருவரிடையே ஏற்பட்ட அறிமுகத்தில் கிளாஞ்சி, நாதீமின் கவிதைகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

அவ்வளவுதான். சண்டே டைம்ஸ், ஸ்கை நியூஸ் என பிரபல பத்திரிகைகள் சிறுவனிடம் பேட்டி காண வந்துவிட்டன. இன்று அவன் உலகப் புகழ்பெற்ற வாக்கர் புக்ஸ் பதிப்பகத்தில், தன் முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிடுவதற்கான ஒப்பந்தம் செய்திருக்கிறான். அந்த பதிப்பகத்தின் பிரதிநிதி டெனிஸ் ஜான்ஸ்டன் பர்ட், இந்த வயதில் இப்படியொரு அசாத்தியமான கவிதைகள் எழுதமுடியுமா என்பது ஆச்சரியம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

image   


Advertisement

நாதீமின் கவிதைகள் காதல், தனிமை என முக்கியமான உணர்வுகளைப் பேசுகின்றன. மிகச்சரியான சொற்களை அவர் பயன்படுத்துகிறார். அந்தக் கவிதைகள்  எளிமையானவை. உத்வேகம் அளிப்பவை என புகழப்படுகின்றன. நாதீமுக்கு கேட் கிளாஞ்சி வைத்துள்ள செல்லப்பெயர் நான்கு வயது கவிஞன். இன்னும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் தனது தாயாரிடம் கவிதைகள் பேசுகிறான்.  

நாதீமின் சாதனைக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த நான்கு வயதும் கொஞ்சம் கூடுதல் நாட்களும் கொண்ட சிறுவன் தனுவன்ன செரசிங்கே, செயற்கை உணவைப் பற்றி புத்தகம் எழுதி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். 1962 ஆம்  ஆண்டு டோரத்தி ஸ்ட்ரைட் என்ற ஆறு வயது சிறுமி, இந்த உலகம் எப்படி தொடங்கியது என்ற நூலை எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

image

புத்தக ஒப்பந்தம் பற்றி நான்கு வயது கவிஞன் நாதீம் உற்சாகமாகப் பேசுகிறான்: “இயற்கையைப் பற்றி கவிதைகள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் கவிதைகள் ஒரு புத்தகத்தில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. என் கவிதைகள் புத்தகமாக வெளிவரும்போது, எனக்கு ஒரு புத்தகம் கிடைக்குமா” என்று விளையாட்டாகக் கேட்கிறான்.  

விளையாடும் வயதில் கவிதைகளில் விளையாடும் சிறுவன். காலம் மாறிப்போச்சு.

சுந்தரபுத்தன்

 

loading...

Advertisement

Advertisement

Advertisement