காரை பின்னால் இயக்கிய ஓட்டுநர் - 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காரை பின்னால் இயக்கியபோது, விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி காரில் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி படுகாயம் அடைந்துள்ளார்.


Advertisement

வேலூர் காகிதபட்டறை பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார்-கவிதா தம்பதியினர். செந்தில்குமார் தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றி வருகிறார், அவரது மனைவி வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களது இளைய மகள் சாரா நேற்று மாலை சக குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

image


Advertisement

அப்போது ஈசாக் என்பவர் தெருவில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை பின்னால் எடுக்க முயன்றுள்ளார். இதில் காரின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது மோதியதில் சாரா உட்பட 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் குழந்தைகளை மீட்டு சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

image

அங்கு 4 வயது பெண் குழந்தை சாரா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மற்றோரு சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து காரை இயக்கிய அதே பகுதியை சேர்ந்த ஈசாக் என்பவரை அழைத்து சென்று விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement