திருவள்ளூரில் இன்று 430 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவள்ளூரில் இன்று மட்டும் 430 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,86,492 அதிகரித்துள்ளது.

 image


Advertisement

தமிழகத்தில் இன்று மட்டும் 60,112 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 4,910 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,31,583 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 51,765 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 74 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். அத்துடன் மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை உயிரிழந்தவர்களில் 444 பேர் கொரோனா பாதிப்புடன் இறந்து விடுபட்டவர்கள் என்பதும் அறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மற்ற மாவட்டங்களின் நிலவரத்தை காணலாம்.

 image


Advertisement

அரியலூர் - 26, செங்கல்பட்டு - 223, கோவை - 178, கடலூர் - 71, தருமபுரி - 7, திண்டுக்கல் - 99, ஈரோடு - 6, கள்ளக்குறிச்சி - 86, காஞ்சிபுரம் - 325, கன்னியாகுமரி - 152, கரூர் - 4, கிருஷ்ணகிரி - 69, மதுரை - 197, நாகை - 14, நாமக்கல் - 41, நீலகிரி - 12, பெரம்பலூர் - 15, புதுக்கோட்டை - 59, ராமநாதபுரம் - 88, ராணிப்பேட்டை - 414, சேலம் - 99, சிவகங்கை - 70, தென்காசி - 85, தஞ்சை - 106, தேனி - 165, திருப்பத்தூர் - 60, திருவள்ளூர் - 430, திருவண்ணாமலை - 210, திருவாரூர் - 45, தூத்துக்குடி - 327, நெல்லை - 120, திருப்பூர் - 29, திருச்சி - 213, வேலூர் - 137, விழுப்புரம் - 105, விருதுநகர் - 363 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்து கண்காணிப்பில் இருந்த 28 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

முதன்முறையாக ஒரே நாளில் 5,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement