விண்வெளியில் மின்னல் - வைரலாகும் வீடியோ - ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சில விஷயங்களை வீடியோக்களில், போட்டோக்களில் பார்க்கும்போது அது நம்மை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும். உற்சாகப்படுத்தும். ஆச்சர்யப்பட வைக்கும். அதுபோல இடியுடன் கூடிய மழை, மின்னலின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போதுமே நம்மை கவர்ந்திழுக்கும்.


Advertisement

ஆனால் கற்பனை செய்து பாருங்கள். பூமியிலிருந்து பார்க்கும்போதே அவை அவ்வளவு அழகாகத் தெரிகிறதென்றால். அதை விண்வெளியிலிருந்து பார்க்கும்போது எவ்வளவு அழகாக இருக்கும்.பாப் பென்கென் என்ற நாசா விண்வெளி வீரர் இன்று ஒரு வீடியோ க்ளிப்பை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அதை பார்க்கும் நம்மை மெய்மறக்க வைக்கிறது அந்த வீடியோ.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் பூமியின் வளிமண்டலத்தின் ஒரு பகுதியில் நகரும் மேகங்களுக்கிடையே ஊதா நிற ப்ளாஷ் திட்டுகள் மின்னி மறைகின்றன. ‘’விண்வெளியிலிருந்து பார்க்கும் ஊதாநிற மின்னல்கள் நம்மை மயக்கும்’’ என்ற தலைப்பில் சிறிய வீடியோ க்ளிப்பை பகிர்ந்திருக்கிறார். 61 ஆயிரம் பார்வையார்களைத் தாண்டி நெட்டிசன்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தி வருகிறது.


Advertisement

இதுகுறித்து பென்கெனிடம் நிறைய கேள்விகள் கேட்டுவருகின்றன்ர். மேலும் பலர் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

loading...
Related Tags : lighting video seen from space

Advertisement

Advertisement

Advertisement