[X] Close

முகக்கவசம் அணியாமல் வந்த கழுதையை பேட்டி எடுத்த நிருபர் - வைரல் வீடியோ

Subscribe
Reporter-interviews-donkey-for-not-wearing-face-mask---Viral-video

கொரோனாவிலிருந்து தப்பிக்க முதல் வழி முகக்கவசம்தான் என ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றனர் மருத்துவர்கள். ஆனால் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் செல்வதை தினமும் பார்க்கமுடிகிறது. முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நிருபர் ஒருவர் செய்த செயல்தான் பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.


Advertisement

வைரலாகிவரும் அந்த வீடியோவில் பத்திரிகையாளர் ஒருவர் சாலையில் அமர்ந்திருக்கும் கழுதையுடன் பேசுவதைக் காட்டுகிறது. அவர் கழுதையிடம் முகக்கவசம் அணியாமல் ஏன் வெளியே வந்தீர்கள்? என கேட்கிறார். கழுதையிடம் பதிலை எதிர்பார்த்து மைக்கை அதன்முன் வைக்கிறார். அந்த கழுதையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அந்த நிருபர் நகர்ந்து முகமூடி அணியாமல் செல்லும் ஒருவரிடம் அதே கேள்வியைக் கேட்டு மறைமுகமாக கழுதையுடன் ஒப்பிட்டுள்ளார் என்பதைக் காட்டுகிறது.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிற்அ


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close