வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம்சி எக்ஸில் 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் மாதத்தின் விலை 50,085 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவின் ஃப்யூச்சர் சந்தையில் தங்கம் 50,000 ரூபாயைக் கடப்பது இதுவே முதல் முறை. அதே போல எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமகும், ஒரு கிலோ வெள்ளிக்கான செப்டம்பர் மாத விலை இன்று காலையில் அதிகபட்சமாக ரூ. 61,255 ரூபாய் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
மேலும் சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 டாலரைத் தாண்டி இன்று 1,865 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இது கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத உச்ச விலை என்பது வர்த்தக வல்லுனர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736ரூபாயாக இருந்த நிலையில் இன்று 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!