'எக்ஸ்டண்டேட் ரியாலிட்டி' - டெக்னாலஜி உலகில் ஒரு புதிய சகாப்தம்..!

What-is-Extended-Reality-

சமீப காலங்களில் நாம் இருக்கும் இடத்திலிருந்தே வேறொரு உலகிற்கு செல்லமுடியும். அந்த உலகத்தில் வாழும் அனுபவத்தை முழுமையாகப் பெறமுடியும் என கேள்விப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படி அது என்ன டெக்னாலஜி என கேள்வி எழுகிறதா? மேலும் இந்த தொழில்நுட்பமானது கல்வி, மருத்துவம், பிஸினஸ் என எல்லா துறைகளின் முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று படித்துக்கொண்டே இருக்கிறோம்.


Advertisement

வெர்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டேட் ரியாலிட்டி என அடுத்தடுத்து வந்து நம்மை அசத்தியது. இன்னும் பத்து வருடம் கழித்து இந்த டெக்னாலஜி மேம்படுத்தப்பட்டு இந்த உலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டே 3000கிமீ தொலைவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்லலாம். ஏன் வேறு உலகத்திற்குக் கூட சென்று வரலாம் என்றால் நம்பமுடிகிறதா?

ஆம், அதுதான் XR என்று அழைக்கப்படுகிற எக்ஸ்டண்டேட் ரியாலிட்டி(Extended Reality). நம்மால் கற்பனை செய்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு இருக்கும் டெக்னாலஜி இது. மனிதனின் பரிணாம வளர்ச்சியைவிட டெக்னாலஜியின் வளர்ச்சி ஆயிரம் மடங்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.


Advertisement

எக்ஸ்டண்டேட் ரியாலிட்டி என்பது தொழில்நுட்ப உலகில் அதிதீவிரமாக வளர்ந்துகொண்டிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஒன்று. இதில் வெர்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டேட் ரியாலிட்டி மற்றும் இது இரண்டும் சேர்ந்த மிக்ஸ்டு ரியாலிட்டி என அனைத்தும் அடங்கும்.

image

வெர்சுவல் ரியாலிட்டி என்பது கற்பனை உலகம். அங்கு நாம் இருப்பதைப் போன்றே உணர வைக்கும். ஆனால் செயற்கை என்ற உணர்வு இருக்கும். டிஜிட்டல் உலகில் நம்மை மூழ்கடிக்க செய்துவிடும். இயற்கைக்கு நிகரான செயற்கை என்று சொல்லலாம். இது கேமிங்கில் அதிகம் பயன்படுத்தப்படும்.


Advertisement


ஆகுமெண்டேட் ரியாலிட்டி என்பது வேறு உலகத்திற்கு நம்மை கொண்டுசெல்லாது. நமக்கு தெரியாத ஒரு செயலில் இறங்க நேரிட்டால் இந்த AR இன் உதவியை நாடலாம். ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உதாரணமாக ஒரு பெரிய ஹோட்டலுக்கு நுழைந்தால் எந்த பக்கம் எது இருக்கிறது என தெரியாது. அந்த நேரத்தில் ஏற்கனவே ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தால் ஸ்மார்போன் கேமிராவை ஆன் செய்தால் அதில் அடுத்தடுத்து எது எங்கே இருக்கிறது என நமக்கு வழிகாட்டும்.

image

இது வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் ‘just a line' என்ற பெரிதாக்கப்பட்ட ரியாலிட்டி பயன்பாடாகும். இருக்கும் ஒரு பொருளாக இல்லாமல் கற்பனை உலகின்மீது இந்த செயலாட்டை பயன்படுத்தினால் அது ஆகுமெண்டேட் வெர்சுவாலிட்டி. மிக்ஸ்டு ரியாலிட்டி என்ற வார்த்தையிலிருந்தே இது VR மற்றும் AR இரண்டும் சேர்ந்தது என அறிந்துகொள்ளலாம். கணினி தொழில்நுட்பம் போன்ற அனைத்திலும் மேம்படுத்தப்பட்ட, தீவிரப்படுத்தப்பட்ட ஒரு டெக்னாலஜி.

image
இந்த எக்ஸ்டண்டேட் ரியாலிட்டி என்பது ஒரு பொருளைப் பற்றிய ஏராளமான தகவல்களை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சேகரித்து அதை ஹாலோகிராபிக் படமாக மாற்றும். அந்த ஹாலோகிராமின் உதவியுடன் ஒரு கற்பனை உலகம் உருவாக்கப்படுகிறது. இது உண்மையான மக்களுடனோ, பொருட்களுடனோ ஒன்றிணைக்கப்படலாம்.

ஒரு உதாரணத்தின்மூலம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். நீங்கள் இந்தியாவில் ஒரு அலுவலகத்தில் பிஸியாக வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். ஆனால் திடீரென அமெரிக்காவில் இருக்கும் ஒரு அலுவலகத்தைப் பார்க்க விரும்புகிறீர்கள். மேலும் மதிய உணவை நிலாவில் அமர்ந்து சாப்பிட ஆசைப்படுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்? கேட்பதற்கே சிரிப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் இது உண்மை அல்ல. ஆனால் உண்மைக்கும் கற்பனைக்குமான இடையில் இருக்கும் நிலை. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நம்மால் இந்த உலகிலிருந்து வேறொரு செல்லமுடியும். இது தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மை கொண்டுசெல்கிறது.

image

XR பொழுதுபோக்கு உலகில் ஒரு மறுமலர்ச்சியையே ஏற்படுத்தும். வீடியோ கேம், கச்சேரிகள், கண்காட்சிகள், கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் போன்ற அனைத்து பொழுதுபோக்குகளையும் வழங்கும். உதாரணமாக ஒரு அருங்காட்சியகத்தை இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாமே உள்ளே சென்று பார்ப்பதுபோன்ற அனுபவத்துடன் பார்வையிடலாம்.

தொழிற்பயிற்சிகள் மற்றும் அதன் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். தொழிலாளர்கள் களத்திற்கு செல்லாமல் ஆனால், சென்றதைப் போன்ற உணர்வுடன் பயிற்சி பெற முடியும். சுரங்கத் தொழில், உற்பத்தித் தொழில் மற்றும் விமானிகளைப் பயிற்றுவிக்க XR தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இதனால் ஒரு விமானியைப் பயிற்றுவிக்க ஆகும் நேரம் 35% குறைகிறது. மேலும் பயிற்சியின்போது 90% தவறுகள் நடப்பதை குறைக்கிறது.

image

கட்டிடத்துறையில் பெரிதும் பயன்படுத்தமுடியும். ஒரு கட்டிடம் எவ்வாறு வரப்போகிறது என்பதை நேரடியாகக் காட்சிப்படுத்த முடியும். இது ரியல் எஸ்டேட் காரர்களுக்கு உதவியாக இருக்கும். பல சிரமங்கள் நீக்கப்படும்.

மருத்துவத் துறையில் பெரிய உதவியாக இருக்கும். நரம்புகள், ரத்த நாளங்கள், செல்கள் போன்ற மனித உடலின் நுண்ணிய பாகங்களை 3டி இமேஜிங் மூலம் உருவாக்க முடியும். இதனால் உடல் உறுப்புகளின் துல்லியமான கிராபிக்ஸ் உருவாக்கப்பட்டு அறுவைசிகிச்சையில் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும். வருங்காலத்தில் ராணுவத்தில் XRiன் பயன்பாடு அதிகமாக இருக்கும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement