”கேக்கை துவம்சம் செய்த யோகி பாபு” - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் யோகி பாபு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


Advertisement

சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் கதவுகளைத் தட்டிய கோடிக்கணக்கான நபர்களில் ஒருவர்தான் யோகிபாபு. அமீர் நடித்த யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன் பின்னர் தில்லாலங்கடி, பையா உள்ளிட்டப் பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த யோகி பாபுவுக்கு சிவ கார்த்திகேயென் நடித்த மான் கராத்தே படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ரெமோ, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் இவரை அடுத்தக்கட்டத்திற்கு  நகர்த்திச் சென்றது. கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்து எல்லோரையும் சிரிக்க வைத்து அசத்தினார். இன்று இவர் தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இந்நிலையில், இவர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு அண்மையில் மஞ்சு பார்கவி என்றப் பெண்ணுடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement