கியூபாவில் முகக் கவசத்துடன் இளம் பெண்கள் கொண்டாட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கியூபாவில் கொண்டாடப்படும் பாரம்பரியமான குயின்செனரோ விழா புகைப்பட அமர்வின்போது முகக்கவசத்தையும் ஒரு பேஷன் ஆடையாக மாற்றியுள்ளார்கள் இளம் பெண்கள். தங்களுடைய பதினைந்தாவது பிறந்தநாளுக்கான பிரத்யேக ஆடையை வடிவமைத்தவர்கள் முகக் கவசத்தையும் அதில் சேர்த்துக்கொண்டார்கள்.


Advertisement

image

குயின்செனரோ என்பது பதினைந்து வயது அடைந்தவர்கள் பங்கேற்கும் பெண்கள் கொண்டாட்டம். ஹவானா நகரில் நடந்த இந்தப் புகைப்பட அமர்வில் காட்சி தருபவர் பதினைந்து வயது பூர்த்தியடைந்த எஸ்டெபானி லினாரஸ் என்ற பெண். இதன் மூலம் கொரோனா தொற்றுக் காலத்தில் தங்களுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தை மறக்கமுடியாத நினைவாக மாற்றிவிட்டார்கள். 


Advertisement

கொரோனா தொற்று பரவிய நாட்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என கியூப அரசு வலியுறுத்தியது. அதன் பிறகு மக்கள் முறையாக அரசு உத்தரவைக் கடைப்பிடித்தனர். நாடு முழுவதும் புதிய கொரோனா தொற்று ஒனறுகூட இல்லாத தினமாக திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.

image   

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் குயின்செனரோ கொண்டாட்டங்களில் முகக்கவசமும் ஒருபகுதியாக மாறியுள்ளது. லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெண்மையின் சடங்காக அது கடைப்பிடிக்கப்படுகிறது. 


Advertisement

“என் ஆடைக்கு ஏற்றவாறு அனைத்து வண்ணங்களையும் கொண்ட முகக்கவசங்களை நான் வடிவமைக்க வேண்டியிருந்தது. முகக்கவசம் எனக்கு முக்கியமானது. ஏனென்றால் இது என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தைக் குறிக்கிறது. கொரோனா தொற்று பரவிய மூன்று மாதங்கள்" என்கிறார் பிறந்தநாள் பெண் சோபியா வலென்சுலா. காற்றில் மிதக்கும் வெள்ளை உடையில் ஒரு கடற்கரை புகைப்பட அமர்வில் அந்தப் பெண் பங்கேற்றார்.

image

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குயின்செனரோ கொண்டாட்டங்களைப் புகைப்படங்கள் எடுத்துவரும் கலைஞர் மேனுவல் பாட்ரன், “முகக்கவசங்கள் அணிந்த இளம்பெண்கள், அதை ஒரு விளையாட்டைப்போல மாற்றிவிட்டார்கள்” என்கிறார்.

சுந்தரபுத்தன் 

loading...

Advertisement

Advertisement

Advertisement