நடுரோட்டில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு : அதிர்ந்துபோன குழந்தைகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி அருகே பத்திரிகையாளர் ஒருவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி துப்பாக்கியால் சுட்டச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

டெல்லி காசியாபாத் அருகே உள்ள விஜய நகர் சாலையில் விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் தனது இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென்று வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், விக்ரமைத் தாக்கி வாகனத்தில் இருந்து கீழே தள்ளியது. இந்தத் தாக்குதலைப் பார்த்து பயந்துபோன அவரது இரு குழந்தைகளும் அங்கிருந்து ஓடினர்.


Advertisement


இதனை தொடர்ந்து விக்ரமை சரமாரியாகத் தாக்கிய அந்தக் கும்பல், அவரை அருகில் இருந்த காரில் சாய்த்து மீண்டும் தாக்கியது. அப்போது திடீரென்று அந்தக் கும்பலில் இருந்த ஒருவன், விக்ரமை துப்பாக்கியால் சுட்டான். இதில், மயக்கமடைந்த விக்ரம் சாலையில் விழுந்தார். இதனை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவரது மூத்த மகள் அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றவுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தந்தையை பார்த்து கதறி அழுததுடன்  அருகில் நின்று கொண்டிருந்தவர்களிடம் தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரியுள்ளார்..

இந்த மொத்தக்காட்சிகளும், அருகே இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது. சரியாக இரவு 10.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த பத்திரிகையாளர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 5 பேரை கைது செய்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement