ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து: சோதனைக்கு தயாராகும் 5000 இந்திய தன்னார்வலர்கள்

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து: சோதனைக்கு தயாராகும் 5000 இந்திய தன்னார்வலர்கள்
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்து: சோதனைக்கு தயாராகும் 5000 இந்திய தன்னார்வலர்கள்

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்தின் மனித சோதனையில் ஆக்ஸ்போர்டு மருந்து வெற்றி அடைந்துள்ளதாக லான்செட் மருத்துவ இதழ் உறுதிப்படுத்தியது. அந்த மருந்தை மனிதர்களிடம் செலுத்தி செய்யப்படும் சோதனைகள்  இந்தியாவில் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. சில மருந்து ஆய்வுகள் இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன. இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கையளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிஷீல்டு எனப் பெயரிடப்பட்டுள்ள ஆக்ஸ்போர்டு மருந்தை  இந்தியாவைச் சேர்ந்த செரம் இன்ஸ்டிட்டியூட், 5 ஆயிரம் தன்னார்வலர்களிடம் செலுத்தி சோதனை செய்யும் பணிகளைத் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மருந்து வெளியாகும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.  

புனேவைச் சேர்ந்த செரம் மருந்து நிறுவனத் தலைவர் ஆதர் பூனாவாலா, “உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான நாங்கள், தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலுக்கு முன்னர் 200 மில்லியன் யுஎஸ் டாலரை மருந்து தயாரிப்பில் முதலீடு செய்துள்ளோம். 300 மில்லியன் டோஸ் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.   

மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் செரம் இன்ஸ்டிட்யூட் இணைந்து செயல்படுகிறது. அதன் மூலம் உலகில் 60 நாடுகளில் வாழும் 300 கோடி மக்களுக்கு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாயன்று தொடங்கிய கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனைகள் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com