பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்ட ஷாருக்கானின் சொகுசு பங்களா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் சொகுசு பங்களா பெரிய பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது


Advertisement

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலரும் வீடுகளுக்குள்ளேயே தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் தன் குடும்பத்துடன் மும்பையில் உள்ள தன்னுடைய சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷாருக்கானின் வீடு பெரிய பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்டுள்ளது.

image


Advertisement

பால்கனி போல் உள்ள பகுதிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பேப்பரால் தடுக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பலரும், கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே வீட்டையே ஷாருக்கான் மூடிவிட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.

image

ஆனால் மும்பை ஊடகத்தினர் வெளியிட்ட செய்தியின்படி மும்பையில் கடுமையான மழை பெய்து வருவதாலும் சாரல் காற்று வீசுவதாலும் பிளாஸ்டிக் பேப்பரால் வீட்டினை ஷாருக்கான் மூடியுள்ளார் என்றும், ஒவ்வொரு வருடமும் செய்யும் வழக்கம்தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்டுள்ள ஷாருக்கான் வீடி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement