(கோப்பு புகைப்படம்)
கொரோனா தொற்று பாதிப்புடன் புனேவில் இருந்து ஷார்ஜாவுக்குச் சென்ற 30 வயது பெண்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் விமானத்தில் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆடிட்டராகப் பணிபுரியும் கணவருடன் துபாயில் வசித்து வந்த அந்தப் பெண், ஊரடங்கு காரணமாக மூன்று மாதங்கள் புனேவின் பிம்பிர்சிஞ்வாட் பகுதியில் தங்க நேர்ந்தது. ஜூலை 11-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டு, பதினான்கு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில், ஜூலை 18-ஆம் தேதி அவரிடமிருந்து சுகாதாரத்துறை அதிகாரிக்கு தகவல். “நான் ஷார்ஜா வந்துவிட்டேன். எனக்கு கொரோனா சோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது” என்று அந்தப் பெண் தெரிவித்திருந்தார். அதையறிந்த காவல்துறையினர், அந்தப் பெண் மீது அரசு ஊழியர்களின் உத்தரவை மீறியது மற்றும் நோய்த்தொற்று பரவ காரணமாக இருந்தது தொடர்பாக மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மீண்டும் அந்தப் பெண் இந்தியாவுக்கு வந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Loading More post
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!