சுஷாந்த் மீதான மீடூ புகார் உண்மையா?: விளக்கமளித்த நடிகை சஞ்சனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தில் பேச்சாரா திரைப்படத்தில் சுஷாந்த்துடன் நடித்த சஞ்சனா சங்கி மீடூ குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படத்தில் தோனியாகவே வாழ்ந்திருப்பார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் நடிப்பால் முன்னுக்கு வந்தவர். கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய சிபிஐ புலன் விசாரணை வேண்டும் என அரசியல் பிரமுகர்களும், அவரது நண்பர்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் தில் பேச்சாரா திரைப்படத்தில் சுஷாந்த்துடன் நடித்த சஞ்சனா சங்கி மீடூ குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். தில் பேச்சாரா படப்பிடிப்பு சமயத்தின் போது நடிகர் சுஷாந்த் மீது, மீ டூ புகார்கள் இருப்பதாக செய்திகள் பரவின. அதில் சஞ்சனா சங்கி தொடர்புபடுத்தப்பட்டார். இது குறித்து வாய்திறக்காமல் இருந்த சஞ்சனா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

image

எல்லா வதந்தி பற்றி பேசியும் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை.எதுவுமே நடக்காதபோது அதைப்பற்றி விளக்கம் அளிக்க தேவையில்லை. சுஷாந்த் ஒரு சிறந்த சக நடிகர். அவர் மீது அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு. எனக்கு ஏதேனும் பிரச்னை இருந்திருந்தால் இந்தப்படத்தை நான் முடித்திருக்கவே மாட்டேன். ஆனால் நாங்கள் படத்தை முடித்து டப்பிங்கை முடித்தோம். உண்மையை மட்டுமே மக்கள் நம்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement