பெண்கள் கால்பந்து அணியின் உரிமையாளரான செரீனா வில்லியம்ஸின் இரண்டு வயது மகள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் ஐ.பி.எல் அணிகளை பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பதுபோலவே, அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து அணிகளிலுள்ள டீம்களை பிரபலங்கள் ஏலத்திற்கு எடுத்துவருகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சார்பில் புதிதாக உருவான அணியை பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸும், ஆஸ்கார் விருது வென்ற நடாலி போர்ட்மெனும் நேற்று ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில், செரீனா வில்லியம்ஸ் தனது இரண்டு வயது மகள் அலெக்ஸிஸ் ஒலிம்பியாவையும் அணியின் உரிமையாளராக்கி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.  


Advertisement

image

 


Advertisement

 

அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து லீக் வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிறது. அதில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சார்பில் பங்கேற்கும் தங்கள் அணியின் பெயரை  ’ஏஞ்சல் சிட்டி’ என்று பெயரிட்டுள்ளார் செரீனா. வீராங்கனைகளுக்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்க ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனைகள், முன்னாள் தேசிய வீர்ர்கள், நடிகைகள் என மொத்தம்  14 பேரை நியமித்துள்ளார். புதிதாக உருவான ‘ஏஞ்சல் சிட்டி’ அமெரிக்க தேசிய கால்பந்து மையத்தின் 11 வது அணியாகும்.

 


Advertisement

image

 

இதுகுறித்துப் பேசிய நடிகை நடாலி போர்ட்மென்,  “நாங்கள் 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க தேசிய  கால்பந்து லீக்கை வென்று ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்வோம். பெண்களுக்கான கால்பந்து அணியை வாங்குவதன் மூலம் பெருமையடைவதோடு அதிக ரசிகர்களையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளோம். விளையாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மகிழ்ச்சியான வழியாகும். இது பெண் விளையாட்டு வீர்ர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement