இந்தியாவின் ஐ.பி.எல் அணிகளை பிரபலங்கள் ஏலத்தில் எடுப்பதுபோலவே, அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து அணிகளிலுள்ள டீம்களை பிரபலங்கள் ஏலத்திற்கு எடுத்துவருகிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சார்பில் புதிதாக உருவான அணியை பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸும், ஆஸ்கார் விருது வென்ற நடாலி போர்ட்மெனும் நேற்று ஏலத்தில் எடுத்துள்ளனர். இதில், செரீனா வில்லியம்ஸ் தனது இரண்டு வயது மகள் அலெக்ஸிஸ் ஒலிம்பியாவையும் அணியின் உரிமையாளராக்கி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய மகளிர் கால்பந்து லீக் வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கிறது. அதில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் சார்பில் பங்கேற்கும் தங்கள் அணியின் பெயரை ’ஏஞ்சல் சிட்டி’ என்று பெயரிட்டுள்ளார் செரீனா. வீராங்கனைகளுக்கு பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்க ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனைகள், முன்னாள் தேசிய வீர்ர்கள், நடிகைகள் என மொத்தம் 14 பேரை நியமித்துள்ளார். புதிதாக உருவான ‘ஏஞ்சல் சிட்டி’ அமெரிக்க தேசிய கால்பந்து மையத்தின் 11 வது அணியாகும்.
இதுகுறித்துப் பேசிய நடிகை நடாலி போர்ட்மென், “நாங்கள் 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க தேசிய கால்பந்து லீக்கை வென்று ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்வோம். பெண்களுக்கான கால்பந்து அணியை வாங்குவதன் மூலம் பெருமையடைவதோடு அதிக ரசிகர்களையும் ஈர்க்கத் திட்டமிட்டுள்ளோம். விளையாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மகிழ்ச்சியான வழியாகும். இது பெண் விளையாட்டு வீர்ர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
Loading More post
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்!
பஞ்சாப் : 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்
டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
அரசு இல்லத்தை 2 மாதங்களுக்கு காலி செய்ய இயலாது : முன்னாள் துணைவேந்தர் சூரப்பா
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்