ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 6 பேர் கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் கிராம மக்கள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.


Advertisement

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 88 வயதான மூதாட்டி கடந்த மாதம் டெல்லியில் ஒரு திருமணத்திற்கு சென்று வந்துள்ளார். வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜூலை 4ஆம் தேதி சிகிச்சையின்போது இறந்தார். எந்த சடங்கும் இல்லாமல் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பிறகுதான் அந்த மூதாட்டிக்கு கொரோனா பாஸிடிவ் என்ற அறிக்கை வந்தது. அதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

88 வயதான அந்த பெண்மணிக்கு ஐந்து மகன்கள். அதில் முதல் மகன் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் இறந்ததை அடுத்து நான்கு பேரும் இறந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து கொரோனாவால் இறந்த செய்தி அந்த பகுதி மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.


Advertisement

image
இதனால் அந்த ஊர் முழுவதும் சீல் வைக்கப்பட்டதோடு, மீண்டும் தீவிர கொரோனா சோதனையில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள்.

இதுகுறித்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரிம்ஸ் அதிகாரி டாக்டர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், ’’ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை அளிக்கும்போதும் மருத்துவர்கள் தங்கள் இதயத்தையும் ஆத்மாவையும் ஊற்றித்தான் மருத்துவம் பார்க்கிறார்கள். இதுபோன்ற அதிர்ச்சியூட்டும் செய்திகள் மருத்துவர்களையும் பாதிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement