"என் சகோதரியின் மரணம் தற்கொலை அல்ல.. கொலை " சோகத்தில் முடிந்த காதல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

என்னுடைய சகோதரி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொள்ளவில்லை, அவள் கொலை செய்யப்பட்டிபருக்கிறாள் என்று பெண் ஒருவர் அளித்த புகார் குர்கான் போலீஸார் அதிரவைத்திருக்கிறது.


Advertisement

ஹரியானா மாநிலம் குர்கானில் 5 ஆவது மாடியிலிருந்து 25 வயதுடைய ஒரு பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக இறந்துப்போன பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து குர்கான் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தப் பெண் கடந்த ஞாயிறுக்கிழமை பார்டிக்காக நண்பரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த இடத்தில்தான் 5 ஆவது மாடியிலிருந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் சகோதரி கூறியது "என்னுடைய சகோதரி கடந்த 3 ஆண்டுகளாக 26 வயதுடைய நபரை காதலித்து வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்னை காரணமாக அந்த நபர் அவளிடம் பேசவில்லை. மேலும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவளை அந்த நபர் துண்டித்து இருந்தார். அந்த நபருக்கு மெயிலும் அனுப்பினால் அவள். ஆனால் மிகவும் கேவலமான பதில்களை அந்த நபர் அவளுக்கு அனுப்பினார். அந்த நபரிடம் பேச எவ்வளவோ முயற்சித்தும் அவளுக்கு தோல்வியே மிஞ்சியது" என்றார்.

தொடர்ந்த பேசிய அவர் "ஆனால் அதிசயமாக சனிக்கிழமை என் சகோதரிக்கு மெயில் வந்தது. அதில் நண்பரின் வீட்டில் பார்ட்டி நடக்க இருக்கிறது. அங்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்திருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு பார்ட்டி நடந்த வீட்டில் இருந்து அவள் குதித்து தற்கொலை செய்துக்கொண்டால் என்ற செய்தி வந்தது. இதனையறிந்து உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு விரைந்தோம். அப்போது அவளின் உடலிலும், உதட்டிலும் கத்தியால் கீரப்பட்ட காயங்கள் இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவள் தற்கொலை செய்துக்கொண்டது போல தோன்றவில்லை.ஒரு மாதமாக என் சகோதரியை பற்றி கவலைப்படாத அந்த நபர், அவளை ஏன் பார்ட்டிக்கு கூப்பிட வேண்டும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

image


Advertisement

இது குறித்து உயிரிழந்த சகோதரி குர்கான் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய காவல்துறை ஆய்வாளர் தின்கர் "உயிரிழந்தவரின் உடலை பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். உயிரிழந்தவரின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement