‘கொரோனா தடுப்பு மருந்து துரிதமாக வினையாற்றுகிறது’ - ஹல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தகவல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தாங்கள் கண்டுப்பிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மனித உடலில் கொரோனாவுக்கு எதிராக குறிப்பிடத்தகுந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் T-Cell Immunity எனப்படும் எதிர்ப்பையும் வெற்றிகரமாக உருவாக்கி இருப்பதாக மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்டுக்கு எதிரான மனித முயற்சியில் குறிப்பிடத் தகுந்த மைல்கல் இது என பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  


Advertisement

கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றியடைந்தது குறித்து இங்கிலாந்து ஹல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணியாற்றிவரும் தமிழகத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் கூறும்போது, ‘’கடந்த நான்கு மாதமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்துத் துறையும் ஜென்னர் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி செய்ததை நாமறிவோம். தடுப்பு மருந்தானது இதுவரைக்கும், மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டு சோதிக்கப்பட்ட முதல் இருநிலைகளிலும் வெற்றியடைந்து அடுத்தகட்டத்துக்கு முன்னேறியிருப்பது நமக்கு ஆறுதலான செய்தி.  

image


Advertisement

அதாவது, தடுப்பூசி என்பது நீண்டகால சோதனைகளுக்கும், பல்வேறு சூழல்களில், நிலப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்குக் கொடுக்கப்பட்டுச் செய்யப்படுகிறது. தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியும், ஐரோப்பிய, ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாட்டு (கொரோனா தொற்றுக்கு ஆளாகாத) மக்களுக்குக் கொடுக்கப்பட்டு, அவர்களின் உடலில் உண்டாகும் மாற்றங்களை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.

சில மருந்துகள் தொடக்க நாள்களிலேயே பக்கவிளைவுகளைத் தரக்கூடும். அப்படி தடுப்பூசி எதிர்விளைவுகளை நம் உடலில் உண்டாக்கிவிட்டால் நோய்த் தொற்றிலிருந்து நாம் தப்பிக்கமுடியாது. அந்தவகையில், ஆக்ஸ்போர்டு பல்கலையில் கண்டுபிடிக்கப்பட்ட ChAdOx1 nCoV-19 என்னும் மருந்தானது  இதுவரைக்கும் எந்தவிதமான தொடக்ககால எதிர்விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும், கொரோனா வைரஸ்களை அழிக்கவல்ல/கரைக்கவல்ல நோயெதிர்ப்புப் பொருள்களை நம்முடைய உடலுக்குள் உருவாவதைத் தூண்டுகின்றன.

Immune System எனப்படும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு  (innate & adaptive) என்ற இரண்டு மண்டலங்களிலும் சரியாக வேலை செய்கிறது என்பதே  இந்த மருந்தின் சிறப்பாகக் கருதப்படுகிறது. அதாவது, நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனும், கொரோனா போன்ற புதிய வகையான நுண்மிகள் உள்ளேimage


Advertisement

உடற்சூழலுக்கேற்ப உருவாக்கப்படும் நோயெதிர்ப்புத் திறனும் இந்தத் தடுப்பூசியால் மிகவும் வலுவான முறையில் தூண்டிவிடப்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

அதோடு, தடுப்பூசி போட்ட 14 நாட்களுக்குள் T-cells எனப்படும் நோய்த் தடுப்பில் ஈடுபடும் ஒருவகை இரத்த வெள்ளை அணுக்களையும், 28 நாள்களுக்குள் Antibodies எனப்படும் SARS-CoV-2 வைரஸ்களை அழிக்கவல்ல நோய் எதிர்ப்புப் பொருள்களையும் தூண்டுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 தடுப்பூசிச் சோதனைக்கட்டங்கள் 0, I, II & III என்று நான்காகப் பிரிக்கப்படுகிறது. முதல் மூன்று சோதனைகளில் முறையே 15, 70, 1000 பேர்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்தால், நான்காம் கட்டத்தில் 3000 பேர் அல்லது அதிகமானவர்களுக்குக் கொடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே புழக்கத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அந்தவகையில் இந்த மருந்தும் நான்காம் கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது.

விரைவில் நல்லசெய்தி கிடைக்குமென்று நம்பலாம்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement