சாம்சங் குடோனில் இருந்து திருடப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான செல்போன் உதிரி பாகங்கள்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள சாம்சங் செல்போன் உதிரி பாகங்களை திருடிச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்


Advertisement

நொய்டாவில் உள்ள சாம்சங் தொலைபேசி நிறுவனத்தின் குடோனில் இருந்து சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள செல்போன் உதிரி பாகங்களை
அங்கு பணியாற்றும் ஊழியர்களே கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது
செய்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட பொருட்களில் பல ஹாங்காங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

image


Advertisement

செல்போன் சார்ஜர்கள், டிஸ்பிலேக்கள், மற்ற பாகங்கள் என அனைத்து உதிரி பாகங்களும் திருடப்பட்டுள்ளன. மேலும் ரூ.20 லட்சம் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அசோக்குமார், லுவ்குஷ் சிங், அஜய் லால், குராவ் சிக்லா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாம்சங் நிறுவனத்திற்கு எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பும் நிறுவனத்தில் வேலைபார்ப்பவர் லுவ்குஷ். இவரே தனது
நிறுவனத்தின் பொருட்கள் சாம்சங் குடோனுக்கு செல்வதை உறுதி செய்யும் பணியில் உள்ளவர். அசோக்குமார் மற்றும் அஜய் லால்
ஓட்டுநர்கள். இவர்களுடன் லுவ்குஷ்க்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் டெல்லியில் செல்போன் கடை நடத்தும் அசோக்குமாரும்
இவர்களுடன் இணைந்துள்ளார். இவ்வாறாக 4 பேரும் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

image


Advertisement

கிட்டத்தட்ட 4 மாதங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். உதிரிப்பாகங்கள் கொண்ட 22 பெட்டிகள் திருடப்பட்ட நிலையில் 18 பெட்டிகளை போலீசார் மீட்டுள்ளனர். 4 பெட்டிகள் விற்பனை செய்யப்பட்ட 20 லட்ச ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement