மின் கட்டண விவகாரம் : தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement

தமிழகம் முழுவதும் மின் கட்டணம் வழக்கமாக இருப்பதை விட அதிக மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், மின் கட்டண விவகாரத்தில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிக மின் கட்டண விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கையில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

image


Advertisement

திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும்,  தி.மு.க பொருளாலர் துரைமுருகன், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், அணைகட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் ஆகியோர் கறுப்புக் கொடி ஏந்தி காட்பாடியில் உள்ள தி.மு.க பொருளாளர் வீட்டின் மூன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி, அதிமுக அரசை கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையில் திருச்சி திமுக அலுவலகத்தில் தனி மனித இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தொண்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement