''அவரைப் போலவே இருக்கிறார்..'' - சுஷாந்த் பயோகிராபியில் நடிக்கவுள்ள டிக் டாக் பிரபலம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாக உள்ளது. அவரது கதாபாத்திரத்திரத்தில் நடிக்க சுஷாந்த் போலவே தோற்றம் கொண்ட டிக் டாக் பிரபலம் சச்சின் திவாரி ஒப்பந்தமாகியுள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பயோபிக் படத்தில் தோனியாகவே வாழ்ந்திருப்பார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் நடிப்பால் முன்னுக்கு வந்தவர். கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணத்தை அறிய சிபிஐ புலன் விசாரணை வேண்டும் என அரசியல் பிரமுகர்களும், அவரது நண்பர்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

image


Advertisement

அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய பணிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது ஒருபுறம் இருக்க, இது தற்கொலைதானா என்ற கேள்வியையும் ஒரு தரப்பினர் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் படமாக உருவாக உள்ளது. அவரது கதாபாத்திரத்திரத்தில் நடிக்க சுஷாந்த் போலவே தோற்றம் கொண்ட டிக் டாக் பிரபலம் சச்சின் திவாரி ஒப்பந்தமாகியுள்ளார்.

image

(சச்சின் திவாரி)


Advertisement

இந்தப்படத்திற்கு Suicide or Murder எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஷாமிக் மவுலிக் இயக்கவுள்ளார். பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் விவகாரம் கிளம்பிய நிலையில் சுஷாந்த் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளவரை அவுட்சைடர் என்று பதிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.இந்தப்படத்திற்கும், ஒரு சிறு நகரத்தில் இருந்து பாலிவுட்டில் கால் பதிக்கும் சச்சின் திவாரிக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement