ஹர்த்திக் பாண்ட்யா வெளியிட்ட காதல் புகைப்படம்: இணையத்தில் வைரல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இன்ஸ்டாகிராமில் காதலி நடாஷாவுடன் காதல் அன்புடன் நடந்துவரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா. அந்தப் படம் ஒரு கனவுக் காட்சியைப் போல காண்போரைக் கவர்ந்திழுப்பதாக உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.


Advertisement

சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவின் திருமண அறிவிப்பும் இணையவெளியில் புயலை உருவாக்கியது. இந்த நிலையில், அண்மையில்  போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனங்களை குளிர்வித்துள்ளார் ஹர்த்திக்.

image


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரரான ஹர்த்திக் பாண்ட்யா,  சில மாதங்களாக நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. காதல் தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்த பாண்ட்யா, ஒரு நாள் இன்ஸ்டாம்கிராம் மூலம் காதலை உறுதிசெய்தார். கல்யாணமும் நடந்து குட்டி பாப்பாவும் பிறக்கவுள்ளது.    

செர்ஃபியன் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக் இந்தியில் 'சத்யாகிரஹா' படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் சில படங்களில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement