கொரோனா: வந்தவாசி திமுக நகர செயலாளர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திமுக நகர செயலாளர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார்.


Advertisement

வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு. இவர் கடந்த மூன்று முறை திமுக நகர கழக செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

image


Advertisement

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்

இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து வந்தவாசி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அவரது வீடு உள்ள தெரு முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement