தென்னாப்பிரிக்காவில் வேகமாகப் பரவும் கொரோனா பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக நாடுகள் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவிவரும் கொரோனா பாதிப்பு, எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற சனிக்கிழமையன்று அங்கு ஒரே நாளில் 13,373 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

image

போட்ஸ்வானா, கென்யா, நமீபியா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடி வருவதாக உலக சுகாதார அமைப்பின் அவசரகால சிறப்பு அதிகாரி மைக் ரேயான் கூறினார்.


Advertisement

image

உலகம் முழுவதும் வாழும் பழங்குடியின மக்கள் மிக மோசமான வாழ்க்கைத் தரத்தால், தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வார நிலவரப்படி, அமெரிக்கப் பழங்குடி மக்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு  ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement