கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் மோசடி - குற்றச்சாட்டுகளை அடுக்கும் திமுக கவுன்சிலர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஓமலூர் ஒன்றிய குழு கூட்டத்தில் கிருமிநாசினி, கையுறைகள், முகக் கவசங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி நிர்வாகத்திற்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் தேக்கம்பட்டி கவுன்சிலர்.


Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய குழு கூட்டமானது அண்மையில் அதன் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் சுமதி, ஒன்றிய ஆணையர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் வரவு செலவு அடங்கிய தீர்மானங்கள் குழுவின் அனுமதிக்காக அறிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் தீர்மானங்களில் மோசடி நிகழ்ந்துள்ளதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

image


Advertisement

 

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக உறுப்பினர்கள் வட்டாட்சியர் அறிவித்துள்ள விலைப்பட்டியலானது, உண்மையான விலைப்பட்டியலிருந்து அதிகமான தொகையைக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியதோடு மட்டுமல்லாமல் அதற்கான தகுந்த சாட்சியங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறினர். ஆனால் அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வேறு விளக்கம் அளிக்கப்பட்டது.ஆகவே அங்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய நிர்வாகத்திற்கு எதிராக சாட்சியங்களைத் கூறும் திமுகவைச் சேர்ந்த தேக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலரும், வழக்கறிஞருமான சிவஞான வேலை புதிய தலைமுறை வாயிலாக தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அளித்த விளக்கங்கள்  பின்வருமாறு:

அன்று நடந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் கிருமி நாசினி, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவற்றிற்கான விலைப்பட்டியலை அறிவித்தார். அதில் கொரோனாத் தடுப்பு பணிகளுக்காக 25/03/2020 ஆம் தேதி 500 லிட்டர் கிருமிநாசினியும், 07/04/2020 ஆம் தேதி 1000 லிட்டர் கிருமிநாசினியும், 30/04/2020 ஆம் தேதி 2000 லிட்டர் கிருமி நாசினியும், 22/5/2020 ஆம் தேதி 1500 லிட்டர் கிருமிநாசினி வாங்கப்பட்டதாகவும், இதில் ஒரு லிட்டர் கிருமிநாசினிக்கு 218 ரூபாய்க்கு வசூலிக்கப்பட்டதாகவும் கூறினார். இது மட்டுமன்றி தடுப்புப் பணிக்காக முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் வாங்கப்பட்டதாகவும், இதில் ஒரு கையுறைக்கு 180 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், ஒரு முகக் கவசத்திற்கு 220 ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.


Advertisement

ஆனால் நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னரே, அதாவது 16/06/2020 மற்றும் 10/07/2020 ஆம் தேதிகளில் நிர்வாகம் கிருமிநாசினி,முகக் கவசம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிய அதே கடையில், 1 லிட்டர் கிருமிநாசினியை 90 ரூபாய்க்கும், ஒரு கையுறையை 16 ரூபாய்க்கும், முகக் கவசத்தை 100 ரூபாய்க்கும் வாங்கியதற்கான கட்டணச் சீட்டுகளுடன் சென்றிருந்தேன்.

image

 

image

அவர்கள் விலைப்பட்டியலை அறிவித்த உடனே நான் என்னிடம் இருந்த சாட்சியங்களை காண்பித்து விலையில் ஏன் இவ்வளவு முரண் பாடு என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு வட்டாட்சியர் நாங்கள் பொருட்கள் வாங்கியத் தேதிகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததாகவும், அப்போது அதன் விலை அதிகமாக காணப்பட்டது என்றும் கூறினர்.உடனே நான், நீங்கள் சொன்ன முதல் மூன்று தேதிகளில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தாலும், அடுத்த தேதிகளில் நிலைமை சீராக காணப்பட்டதே என்றும் அப்போதும் எப்படி இவ்வளவு விலைக்கு நீங்கள் பொருட்களை வாங்கினீர்கள் என்றும் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் நாங்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் படி பணிகளை மேற்கொண்டோம் என்று விளக்கம் அளித்தனர்.

22/5/2020 ஆம் தேதி வாங்கிய 1500 லிட்டர் கிருமிநாசினியானது காமலாபுரம் மற்றும் துளசம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.இது குறித்தும் கேள்வி எழுப்பினோம். அதற்கும் அவர்கள் தெளிவான விளக்கங்களை தரவில்லை. இதனையடுத்து எந்தெந்த ஊராட்சிகளுக்கு எவ்வளவு லிட்டர் கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டோம். அதற்கும் அவர்கள் தெளிவான விளக்கங்களைத் தரவில்லை.

image

image

image

image

image

 


இது மட்டுமன்றி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான 11 மாதங்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியத்தொகையாக 19,85,500 கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினர். ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் சமர்பித்துள்ள விண்ணப்பங்களில் 16,24,500 ரூபாயானது 9 மாதங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

image

இது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஆனால் அதுதான் நடைமுறை என்று கூறி விட்டுச் சென்று விட்டனர். அவர்கள் அளித்த விளக்கங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் நாங்கள் மோசடி நடந்ததாகக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்றார்

இதுகுறித்து ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன் கூறும்போது “கொரோனா பரவல் ஆரம்பமானக் காலத்தில் கிருமி நாசினி பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் அப்போது கிருமிநாசினி விலையானது அதிகமாகக் காணப்பட்டது. அதனடிப்படையிலேயே கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கப்பட்டது. இதில், எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை. மேலும், இதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அதை அறியாத திமுக உறுப்பினர்கள் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தினர்” என்றார்

loading...

Advertisement

Advertisement

Advertisement