டி20 போட்டிகளின் வரவுக்கு பின்னர் ஷாட்டர் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளில் ஏனோ பவுலர்களின் ஆதிக்கம் அதிகம் இல்லாமல் போனது. ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் பவுலர்கள் கெத்து காட்ட முடியும்’ என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்லி வந்தனர். தற்போது அதை உறுதி செய்யும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை போட்டி போட்டு வீழ்த்தியுள்ளனர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸும், ஸ்டூவர்ட் பிராடும்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மற்ற பவுலர்கள் வீழ்த்த மிடில் ஆர்டர் மற்றும் பின் வரிசை வீரர்களை வெறும் எட்டு ஓவர்களில் தலா மூன்று விக்கெட்டை வீழ்த்தி அசத்திவிட்டனர் வோக்ஸ் - பிராட் கூட்டணியினர்.
23 ஓவர்களை வீசிய பிராட் 66 ரன்களை விட்டுக்கொடுத்து ப்ரூக்ஸ், பிளாக்வுட் மற்றும் டவ்ரிச்சை அவுட் செய்தார். இதில் ப்ரூக்ஸ் அரை சதம் கடந்து தனது இன்னிங்க்ஸை செட் செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
21 ஓவர்களை வீசிய வோக்ஸ் 42 ரன்களை விட்டுக்கொடுத்து சேஸ், ஹோல்டர் மற்றும் கேப்ரியலை அவுட் செய்தார். வேஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் சேஸும் அரை சதம் கடந்திருந்தார்.
கடைசி நாளான இன்றைய போட்டியிலும் வோக்ஸ் - பிராட் கூட்டணியினர் பவுலிங்கில் மிரட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. நான்காம் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் முன்னில்லையில் உள்ளது. முதல் இன்னிங்சில் அந்த அணி 469 ரன்கள் குவித்து இருந்தது.
Loading More post
“பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை”-ஐஐடி மாணவி புகார்
ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலில் 'சூரரைப் போற்று'
மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
கையில் வாள்... குதிரை சவாரி... டிராக்டர் பேரணிக்கு காவலாக வந்த 'நிஹாங்' சீக்கியர்கள் யார்?
4 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி