[X] Close

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக நிர்வாகி உயிரிழப்பு

Subscribe
dmk-perur-secretary-died-due-to-covid-19-positive

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த திமுக பேரூர் செயலாளர் ஜெயசந்திரன் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த திமுக பேரூர் செயலாளர் ஜெயசந்திரன் (56). இவர் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 16 ஆம் தேதி உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சோதனைசெய்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயசந்திரன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


Advertisement

இந்நிலையில், தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close