சமூக வலைதளங்களில் வயிற்றில் இரையோடு ஒரு மலைப்பாம்பு குடிநீர் தொட்டியில் தனது பாதி உடலை நனைத்து குளிரச்செய்யும் வீடியோ வைரலாகி வைரலாகிவருகிறது.
விலங்குகளுக்கு குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் நிறைந்தத் தொட்டியில் பாம்பு ரிலாக்ஸ் செய்வதை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். பாம்பின் செயலையும் இரையை உண்டு வீங்கியதுபோல் காணப்படும் அதன் வயிற்றையும் பார்த்து எல்லோரும் சிலிர்ப்படைந்து பகிர்ந்து வருகிறார்கள். இதுவரை இந்த வீடியோவை ஆயிரம் பேருக்குமேல் பார்த்துள்ளார்கள்.
மலைப்பாம்புகள் தங்கள் இரையை முழுமையாக உட்கொள்ளும் என்று அறியப்படுபவை. இவை ஒரு பெரிய மானாக இருந்தாலும், அதன் கழுத்தை பற்களை வைத்தே நெறித்துக்கொன்று விழுங்கிவிடும். அப்படி விழுங்குபவை இரையை உண்டப்பிறகு, அது செறிக்கும்வரை சிலவாரங்களுக்கு தேவையில்லாமல் உண்ணாது.
இந்த வீடியோவில் மலைப்பாம்பின் வயிற்றில் இரை மிகவும் நெருக்கமாக காட்டப்படுவது திகிலை ஏற்படுத்துகிறது. அப்போதுதான், இரையை உண்டு குடிநீர் தொட்டிக்கு வந்ததுபோல் இருக்கிறது.
https://twitter.com/susantananda3/status/1283019019985928193
A huge python after a meal to cool itself... pic.twitter.com/OwvmAmEyjk— Susanta Nanda IFS (@susantananda3) July 14, 2020
இந்த வீடியோவில் ஆச்சர்யமான கமெண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள். ’பாம்பைப் பார்க்க பயமாக இருக்கிறது’ என்றும், ’அதன் வயிற்றில் என்ன இரை இருக்கிறது’? என்றும் பார்க்க ஆவலாக உள்ளது என்றும் கூறிவருகிறார்கள். மலைப்பாம்பின் இந்த வீடியோ தென்னாப்பிரிக்க தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?