90 கோடி பார்வையை பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் : புதிய சாதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

90 கோடி யூடியூப் பார்வையை பெற்று தென்னிந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை மாரி 2 படத்தின் ‘ரவுபி பேபி’ படைத்துள்ளது.


Advertisement

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி 2’. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளிக்க, ‘ரவுடி பேபி பாடல்’ மிகப்பெரும் வெற்றியை பெற்றது. யூடியூப்பில் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு வந்த இப்பாடல், தற்போது 90 கோடி பார்வைகளை கடந்து, தென்னிந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது

image


Advertisement

இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் ஃபிலிம்ஸ் ட்விட்டரில் பகிர்ந்து, அன்பும் ஆதரவும் கொடுத்த ரவுடி பேபிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளது. இன்னும் வலுவுடன் ஒரு பில்லியனை அடைவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவும் தனது முகநூல் பக்கத்தில் 900 மில்லியன் பார்வை போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

ஓடி ஓடி உழைத்த வட்டாட்சியர் : கொரோனா மீட்பு பணியில் நேர்ந்த சோகம்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement