'நான் இருக்கேன் கேப்டன்' என கேப்டன் கோலிக்கு கைகொடுக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அந்நிய நாட்டு மைதானத்தில் அபாரமாக ஆடி இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்தார் 25 வயதான ஸ்ரேயாஸ் ஐயர். அந்த தொடரில் இரண்டு அரை சதம் மற்றும் ஒரு சதத்தை அவர் எடுத்திருந்தார்.


Advertisement

image

அதன் மூலம் பல ஆண்டுகளாக இந்திய அணியில் நிலவி வந்த நான்காவது டவுன் பேட்ஸ்மேனுக்கான தேடலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.


Advertisement

டாப் ஆர்டரில் ரோகித் - ராகுல் கூட்டணி பட்டையைக் கிளப்ப, மிடில் ஆர்டரில் தனி ஆளாக ரன் சேர்க்கும் பணியில் மும்முரமாக இருக்கும் கேப்டன் கோலிக்கு கை கொடுக்கும் கையாக 'நான் இருக்கேன் கேப்டன்' என சொல்லி சர்வதேச கிரிக்கெட் களத்தை கலக்கி வருகிறார் ஸ்ரேயாஸ். 

1994இல் மத்திய மும்பையின் ஆதர்ஷ் நகரில் பிறந்தவர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கிரிக்கெட்டை கெரியராக அமைத்துக் கொள்ள ஒரு காரணம் இருக்கும்.  ஸ்ரேயாஸ் அவரது தந்தை சந்தோஷ் ஐயரின் கனவை நிறைவேற்ற கிரிக்கெட் பேட்டை எடுத்தவர். கிரிக்கெட் அவரது ஜீனிலேயே கலந்தது. 

 ஸ்ரேயாஸின் தந்தை அவரது கல்லூரி காலம் வரை கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். பின்னாளில் குடும்பச் சூழல் காரணமாக தன் கிரிக்கெட் கனவிற்கு முழுக்கு போட்டுள்ளார். கையில் சேமிப்பு சேர்ந்ததும் மீண்டும் கிரிக்கெட் ஆசை துளிர்விட்ட போது நாப்பது வயதைக் கடந்திருந்தார். அதனால் தன் மகனை எப்படியாவது கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டுமென விரும்பியுள்ளார். இருந்தாலும் அதை  ஸ்ரேயாஸிடம் சொல்லாமலே இருந்தார். 


Advertisement

image

பள்ளி நேரம் போக கிடைக்கின்ற நேரத்தை மைதானத்திலேயே செலவிட்டுள்ளார்  ஸ்ரேயாஸ். 

ஒன்பது வயது வரை கல்லி கிரிக்கெட்டில்  ஸ்ரேயாஸ் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தான் முறையான கிரிக்கெட் பயிற்சிக்காக ஜிம்கானா பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டுள்ளார் அவரது தந்தை.

அதன் பிறகு டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தியதன் மூலம் அண்டர் 19 இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை 2014 இல் பெற்றார். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் பால பாடம் கற்றுக் கொண்ட  ஸ்ரேயாஸின் ஆட்டத் திறன் மாற ஆரம்பித்தது. அனைத்து பந்துகளையும் அடித்து ஆடுவதைக் காட்டிலும் எந்த பந்தை அடிப்பது, எதை விடுவது என அனைத்து நேர்த்திகளையும் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் கற்றுக் கொண்டார். 2014இல் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இரண்டு அரை சதம் அடித்திருந்தார்  ஸ்ரேயாஸ்

அதன் பின்னர் ஐ.பி.எல், ரஞ்சி, விஜய் ஹசாரே கோப்பை என உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியவருக்கு இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு 2017இல் கிடைத்தது. ஐ.பி.எல் தொடருக்காக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கிடம் பயிற்சி பெற்றார்.

ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து பார்மெட்டிலும் விளையாடும் திறன் படைத்தவர்  ஸ்ரேயாஸ். இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

image

இதுவரை அவர் ஆடிய பதினெட்டு ஒருநாள் போட்டிகளில் எட்டு அரை சதம் மற்றும் ஒரு சதம் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அவரது சராசரி 51.86. டி20 போட்டிகளில் அவரது சராசரி 50.99. பேட்டிங் மட்டுமல்லாது அணியை வழிநடத்திச் செல்வதிலும், பீல்டிங் செய்வதிலும்  ஸ்ரேயாஸ் கில்லி. 

இதே பார்மில் சர்வதேச கிரிக்கெட்டில்  ஸ்ரேயாஸ் ஆடினால் கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கலாம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement