[X] Close

சென்னையில் முதியோர்களை தாக்கி பணம் பறிப்பு: இளைஞர்களுக்கு வலை விரிக்கும் போலீஸ் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் காவலாளியை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் 3 முதியவர்களை தாக்கி பணத்தை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement

சென்னை மயிலாப்பூரில் நகைக் கடையின் காவலாளியான முதியவரான திருநாவுக்கரசர் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தை திருடிச் சென்றனர். பிறகு அங்கே சாலையோரமாக படுத்திருந்த யாசக முதியவர்கள் கன்னியம்மாள், சங்கரன் ஆகியோரையும் அடையாளம் தெரியாத 2 பேர் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

image


Advertisement

மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ. 150 பணத்தை பறித்து சென்று விட்டனர். காயமடைந்த 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் காவலாளி திருநாவுக்கரசுவை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனை போலீசார் கைப்பற்றி உள்ளனர். பழைய குற்றவாளிகளாக இருக்கலாமா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement