[X] Close >

1,700 கி.மீ தூரம்.. 10 மாதங்கள்.. - ஊர்ந்துவந்த 74 டயர்கொண்ட ராட்சத லாரி!

Mammoth-truck-moved-with-special-arrangements-for-10-months

மகாராஷ்டிராவின் நாசிக் நகரிலிருந்து 1,700 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி மையத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியது ராட்சத லாரி. கொரோனா ஊரடங்கால் ஒரு மாதகால தாமதத்திற்குப் பிறகு தனது பயணத்தை முடித்துள்ளது.


Advertisement

வழக்கமாக நாசிக்கிலிருந்து திருவனந்தபுரம் வரை லாரிகள் ஐந்து முதல் ஏழு நாட்களில் வந்துசேரும். ஆனால் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ராட்சத லாரி 5 மாநிலங்களிலும் நத்தை வேகத்தில் ஊர்ந்தது. ஒரு நாளில் குறைந்தது 5 கி.மீ மட்டுமே நகர்ந்தது. கடந்து வந்த ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மற்ற வாகனங்களை நிறுத்தப்பட்டது. சாலைகளில் இருந்த குழிகள் சரிசெய்யப்பட்டது. மரங்கள் வெட்டப்பட்டது. மின்கம்பங்கள் அகற்றப்பட்டது. அந்த லாரிக்கு இத்தனை சிறப்பம்சங்கள் செய்யப்பட காரணம், விண்வெளி ஆட்டோக்ளேவ் இயந்திரத்தை சுமந்துசென்றதுதான்.

image


Advertisement

இதுபற்றி அந்த பயணத்தில் ஈடுப்பட்டிருந்த ஊழியர் சுபாஷ் யாதவ் கூறுகையில், ‘’இந்த ஊரடங்கால் எங்களின் பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஆந்திராவில் எங்கள் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் எங்கள் ஒப்பந்த நிறுவனம் தலையிட வேண்டியிருந்தது. காரணம், எங்கள் குழுவில் 30 பேர் கொண்ட பொறியாளர்கள் இருந்தனர்.

நாங்கள் கொண்டுசென்ற இயந்திரம் 7.5 மீட்டர் உயரமும், 7 மீட்டர் அகலமும் கொண்டவை. நாங்கள் ஏற்றிச்சென்ற வாகனம் வலுவாக இருக்கவேண்டும். அதனால்தான் சாலைகளில் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாலங்களை வலுப்படுத்த இரும்பு கட்டைகள் போடப்பட்டிருந்தது. இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்தது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது ’’ என்றார்.

image


Advertisement

விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி விண்வெளி சம்பந்தப்பட்ட தயாரிப்புகளில் ஆட்டோக்ளேவ் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்தப்படும். தேவையான மாற்றங்களை செய்தபின்னர் இந்த இயந்திரம் அடுத்த மாதம் இயக்கப்படும் என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close