“கடலூர் சிறையில் சித்திரவதைக்குள்ளாகும் கணவனை காப்பாத்துங்க” : கதறும் நெய்வேலி பெண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடலூர் சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக உள்ள தனது கணவன் மீது சிறைக்காவலர்கள் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அவரைக்காப்பாற்றுமாறும் புகார் தெரிவிக்கிறார் ரம்யா.


Advertisement

image

நெய்வேலி அருகிலுள்ள வடக்குமேலூர் கிராமத்தை சேர்ந்தவர் தனகாந்தன். இவர் ஆயுள்தண்டனை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை நேற்று சிறைக்காவலர்கள் கடுமையாக தாக்கியதாக சொல்கிறார் ரம்யா “ நேற்று எனது கணவர், அவரின் பிளாக்கிலிருந்து வேறு பிளாக்கிற்கு சென்றதாகக்கூறி வீராச்சாமி மற்றும் பிரசாத் என்னும் இரண்டு சிறைக்காவலர்கள் இவரை மிகக்கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்காரணமாக ஏற்கனவே அவருக்கு கழுத்து மற்றும் முதுகில் ஆபரேசன் செய்து வைக்கப்பட்டுள்ள பிளேட்டுகள் உடைந்துவிட்டதாகவும், உடல் முழுவதும் மிகவும் பலத்த காயத்துடன் இருப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டுவந்த இடத்தில் மற்றொருவர் மூலமாக எனக்கு தகவல் சொன்னார். இப்போது அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்றுகூட தெரியவில்லை. பலத்த காயம் அடைந்த அவருக்கு இப்போது சரியான சிகிச்சைகூட கொடுக்காமல் மீண்டும் சிறைக்கு கொண்டுசென்றுவிட்டனர்” என்கிறார் அவர்


Advertisement

image

 “கடந்த வருடமும் இதேபோல என் கணவனை மிகக்கடுமையாக சிறைக்காவலர்கள் தாக்கியதால் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு நான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவமனைகளில் இரண்டுமாதங்கள் வைத்திருந்து சிகிச்சை செய்தோம். அப்போதே கழுத்து மற்றும் முதுகில் பிளேட் வைத்து அறுவைசிகிச்சை செய்துள்ளோம். இப்போது கொரோனோ காரணமாக சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை அதனால் கடந்த மூன்று மாதமாக அவரை நான் பார்க்கவில்லை இப்போதும் அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்றுகூட தெரியவில்லை” என்று கண்ணீர் வடிக்கிறார்.

image 


Advertisement

“சிறையில் சாப்பாடு சரியில்லை என்று ஒருமுறை கேள்வி கேட்டுள்ளார் என் கணவர். அப்போது முதல் செல்போன் வைத்திருந்தார், வேறு இடத்திற்கு சென்றார் என்று ஏதாவது காரணம் சொல்லி தொடர்ந்து இவரை கடலூர் சிறைக்காவலர்கள் சித்திரவதை செய்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது கணவருக்கு உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவரின் உயிரைக்காப்பாற்ற உதவி செய்யுங்கள்” என்கிறார் கண்ணீருடன்   

image

 “ஆயுள்தண்டனை கைதி தனகாந்தன் தனது தொகுதி 4-ல் இருந்து தொகுதி 1க்கு செல்ல முயன்றார். இதை பார்த்த சிறைக்காவலர்கள் பிரசாத் மற்றும் வீராச்சாமி கேள்வி கேட்டனர். இதனால் பிரசாத்தின் சீருடையை சேதப்படுத்திய தனகாந்தன், தன்னைத்தானே தலையில் கல்லால் அடித்து காயப்படுத்திக்கொண்டார்” என்று சிறைத்துறை அதிகாரி அப்துல் ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement