கத்தரிக்காய் மிளகுக் கறி
தேவை
நறுக்கிய கத்தரிக்காய் - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
பூண்டுப் பல் - 2
மஞ்சள் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
தேங்காய்ப்பால் - லு தம்ளர்
அரைக்க
பூண்டுப் பல் - 4
மிளகு - 1லீ டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எப்படி செய்வது?
வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், பூண்டு, கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும். பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்கவிடவும். கொதித்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
கத்தரிக்காய் கசகசா சாப்ஸ்
தேவை
இளசான சின்ன சைஸ் கத்தரிக்காய் - 1|4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 நீளமாக நறுக்கியது
கறி வேப்பிலை - 2 ஈர்க்கு
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1|2 கப்
சுடு நீரில் ஊறவைத்த கசகசா - 3 டீ ஸ்பூன்
சோம்பு - 1|2 டீஸ்பூன்
கெட்டியான புளிக் கரைசல் - 1|2 கப்
நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
எப்படி செய்வது?
தேங்காய், கசகசாவை மைய அரைத்து வைக்கவும். கத்தரிக்காய்களை நடுவில் மட்டும் நான்காக பிளந்தபடி நறுக்கி நன்கு சுத்தம் செய்தபின் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அடி கனமான இரும்பு வாணலியில் எண்ணெயில் சோம்பு தாளித்து அதோடு கத்தரிக்காய்களைச் சேர்த்து வதக்கவும். காய் பாதி வெந்தபின் வெங்காயம், இஞ்சிப் பூண்டு பேஸ்ட் சேர்த்து அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும். தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும்வரை கிளறவும். புளிக்கரைசல், அரைத்த தேங்காய் கசகசா கலவையுடன் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்து, வாணலியில் விட்ட எண்ணெய் மேலாக பிரிந்து வரும்பொழுது இறக்கி, கறிவேப்பிலையை மேலாக தூவி விடவும். அருமையான ருசியுடன் சாப்ஸ் ரெடி!
முந்திரி கத்தரி சாப்ஸ்
தேவை
நல்ல இளம் பிஞ்சுக் கத்தரிக் காய் – 1|4 கிலோ
பெரிய வெங்காயம் – 1
புளிக் கரைசல் – 1|2 கப்
சோம்பு – 1 டீ ஸ்பூன்
கசகசா – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1 கப்
முந்திரி – 10
தனி மிளகாய்த் தூள் – 3 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1|2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 200 மில்லி
கறி வேப்பிலை – 2 ஈர்க்கு
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது?
கத்தரிக்காயை நான்காக பிளந்து நீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைக்கவும். தேங்காய்த் துருவல், கசகசா, முந்திரி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், புளிக் கரைசல் ஆகியவைகளைச் சேர்த்து மிக்ஸியில் வெண்ணெய் பதத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
நான்ஸ்டிக் வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும். அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை எண்ணெயில் நன்கு வதக்கி, பின் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய்நன்கு அமுங்கும் வரை எண்ணெயில் வதக்கி, பின் அரைத்த தேங்காய், முந்திரிக் கலவையை கத்தரிக்காயோடு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சாப்ஸ் நன்கு தேன் பக்குவத்திற்கு வந்து, எண்ணெய் பிரிந்து மேலே வரும் பொழுது இறக்கிப் பரிமாற வேண்டும். சாதம், பலாவ் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்